அழகர்கோவிலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
ADDED :2319 days ago
அலங்காநல்லுார்: அழகர்கோவில் நுாபுர கங்கை தீர்த்தத்தில் ஆடிமாதம் முதல் வெள்ளிகிழமையொட்டி நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் புனிதநீராடி ராக்காயி அம்மனை தரிசித்தனர். சோலைமலை முருகன் கோயிலில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதிகளில் விசஷே பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கள்ளழகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேலும் கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் சக்கரதாழ்வார் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இக்கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.