கெங்கவல்லியில் கோவிலை அடைந்தது செல்லியம்மன் தேர்
ADDED :2276 days ago
கெங்கவல்லி: தெடாவூரில், போலீஸ் பாதுகாப்புடன் நடந்த தேர், நேற்றிரவு (ஜூலை., 19ல்) கோவிலை வந்தடைந்தது. கெங்கவல்லி அருகே, தெடாவூரில், கூத்தாண்டவர், செல்லியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. அங்கு, கடந்த, 15ல் தொடங்கிய தேர் திருவிழா, இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில், பாதியில் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைக்கு பின், நேற்று முன்தினம் (ஜூலை., 18ல்), தேர் வீதியுலா சென்றது. நேற்று (ஜூலை., 19ல்) மாலை, போலீஸ் பாதுகாப்புடன், தேரை, முக்கிய வீதிகள் வழியாக, திரளான பக்தர்கள் இழுத்து வந்தனர். இரவு, 9:00 மணிக்கு, மாரியம்மன் கோவில் வளாகத்துக்கு, தேர் வந்தடைந்தது.