விழுப்புரம் கோவில் குளம் சீரமைக்கும் பணி களமிறங்கிய சுற்றுச்சூழல் சங்கம்
ADDED :2277 days ago
விழுப்புரம்: கோலியனுாரில் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் களத்தில் இறங்கியுள்ளது.விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் புத்துவாய் அம்மன் கோவில் அருகே, பெரிய குளம் மற்றும் ஒரு சிறிய குளம் உள்ளது. இந்த சிறிய குளம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தது.
மேலும், குளம் குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் குட்டையாகவும் மாறியது. இந்நிலை யில், இந்த குளத்தை சீரமைக்கும் பணியில், செஞ்சி கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் களத்தில் இறங்கியுள்ளது.
இதற்காக, முதல் கட்டமாக குளத்தில் உள்ள புதர்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றினர். பின், பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தில் உள்ள மணலை டிராக்டர்கள் மூலம் வெளியேற் றினர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.