உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் திருக்கல்யாணம் ஜூலை 25ல் விழா துவக்கம்

ராமேஸ்வரத்தில் திருக்கல்யாணம் ஜூலை 25ல் விழா துவக்கம்

 ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா ஜூலை 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது ராமேஸ்வரம் கோயிலில் அன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றம் நடக்கிறது.ஆடி அமாவாசையான ஜூலை 31 ல் ராமர் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தல், ஆக.,2ல் ஆடித்தேரோட்டம், ஆக.,5ல் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் தங்க பல்லாக்கு, ரிஷபம் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி செய்து வருகிறார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !