உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி குண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம்

ஆடி குண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம்

 திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், 13ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா, வரும், 30ம் தேதி நடக்கிறது.திருப்பூரின் காவல் தெய்வமான, ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழா 17ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது; நேற்று  பூச்சாட்டு விழா நடந்தது.வரும், 22ம் தேதி காலை, மகாமுனி பூஜையும், 23ல், கோ பூஜை, மகா கணபதி ேஹாமம், கொடியேற்றம், குண்டம் திருவிழா காப்புக்கட்டும் நிகழ்ச்சி; மாலையில், நொய்யல் கரையில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் இருந்து, செல்லாண்டியம்மனுக்கு, சீர் வரிசை எடுத்து வரும் வைபவம், 24ம் தேதியும், கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வரும் நிகழ்ச்சி, 25ம் தேதியும் நடக்கிறது.வரும், 26ல் டவுன் மாரியம்மன் கோவிலில்  இருந்து பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 27ல், தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கின்றன.வரும், 28ம் தேதி காலை, சவுடேஸ்வரி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து, 29 ம் தேதி காலை, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து  குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம்,இரவு 6:00 மணிக்கு அம்மை அழைத்தல் மற்றும் திருக்கல்யாண உற்வசமும், இரவு, 9:00 மணிக்கு, குண்டத்துக்கு அக்னி இடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும், 30ம்  தேதி (ஆடி 14ம் தேதி), காலை, 6:00 மணிக்கு குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.மாலை, 3:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், மாலையில் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதியுலாவும், 31ம் தேதி மஞ்சள் நீர் விழாவும், ஆக.,  1 மற்றும் 2ம் தேதிகளில் மகா அபிேஷகம் மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !