உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிசூலக் காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரிசூலக் காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

 காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில், திரிசூலக்காளியம்மன் பீடத்தில், 35ம் ஆண்டு, தீமிதி விழா இன்று நடைபெறுகிறது.விழாவையொட்டி, இன்று காலை, 6:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், 7:30 மணிக்கு, உலக நன்மைக்காக யாக  வேள்வியை அன்னை பரமேஸ்வரி நடத்துகிறார்.காலை, 8:30 மணிக்கு, திருவிளக்கு பூஜையும், 9:30 மணிக்கு, அன்னதானமும், 11:00 மணிக்கு, வேப்பம் சீலை சார்த்தல் நடைபெறுகிறது.பகல், 12:00 மணிக்கு, கூழ்வார்த்தலும், 1:00 மணிக்கு, அன்னதானமும், 2:30 மணிக்கு,  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.மாலை, 4:00 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவும், 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், இரவு, 7:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இரவு, 8:00 மணிக்கு மின்னொளி மற்றும் மலர் அலங்காரத்தில் அம்மன்  வீதியுலாவும், இரவு, 9:00 மணிக்கு நாடகமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !