உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு

வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்தார். இதில், பிரபல உற்சவமான  தேரோட்டம், 10ம் தேதி விமரிசையாக நடந்தது. 17ம் தேதி உற்சவ சாந்தி, 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, விடையாற்றி உற்சவத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !