திருவிளக்குடன் பெண்கள் வழிபாடு
ADDED :2275 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில், ஆடி, முதல் வெள்ளியை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, பெண்கள் திருவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.திருக்கழுக்குன்றம், திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி, முதல் வெள்ளியில், குத்துவிளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில், இந்தாண்டு, ஆடி, முதல் வெள்ளி மற்றும் மழை வேண்டி, கனக துர்கா மகளிர் குழுவினர், நேற்று முன்தினம் இரவு, திருவிளக்கு எடுத்து வந்து வழிபட்டனர்.இதில், மூலவர் திரிபுர சுந்தரி அம்மனுக்கு, மகா அபிஷேகமும், அர்ச்சனையுடன் தீபாராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள், திருவிளக்கு எடுத்து வந்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி, அம்மனை வழிபட்டனர்.