உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவர் கோவில் குளத்தில் மழை வேண்டி வருண ஜபம்

வீரராகவர் கோவில் குளத்தில் மழை வேண்டி வருண ஜபம்

 திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவில் குளத்திற்குள், அஹோபில மடத்தின் சீடர்கள், 10 பேர், தண்ணீருக்குள் இறங்கி, வருண ஜபம் நடத்தினர்.திருவள்ளூர், வீரராகவர் கோவில் திருக்குளத்தில், மழை வேண்டி, ஐந்து நாள் ஜபம், நேற்று காலை  துவங்கியது.அஹோபில மடத்தின், 46ம் பட்டம் அழகிய சிங்கர் முன்னிலையில், சீடர்கள், 10 பேர், கிருஷ்ணன் கோவிலில், கும்பம் வைத்து, சங்கல்பம் நடத்தினர்.பின், 10 பேரும், குளத்திற்குள் இறங்கி, கழுத்தளவு தண்ணீரில் நின்று, இரண்டு மணி நேரம் வருண ஜபம்  நடத்தினர். பின், யாகம் வளர்த்து, பூஜை நடத்தினர்.இதே போல், வரும், 24ம் தேதி வரை, தினமும் காலை, மாலை இரண்டு மணி நேரம், வருண ஜபம் நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !