சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம், காளாப்பூரில் திருவிளக்கு பூஜை
ADDED :2379 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்களம் ருத்ர கோடீஸ்வர உடனுறை ஆத்ம நாயகி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
எஸ்.வி.மங்கலம் கிராமத்தார்களால் திருவிளக்கு பூஜை கணபதி பூஜையுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜையில் 300 க்கும் அதிகமான பெண்கள் பூஜை செய்தனர்.அதேபோன்று காளாப்பூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 200க்கும் அதிகமான பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.