செங்கம் அருகே 8ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED :2269 days ago
திருவண்ணாமலை: செங்கம் அருகே எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மணிக்கல் கிராமத்தில், செக்கு கல்வெட்டு உள்ளதாக, அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர், திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, அதன் செயலர் பாலமுருகன், முனைவர் சுதாகர், நேற்று (ஜூலை., 21ல்)அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இதில், வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும், வலது புறம் குத்து விளக்கு, இடது புறம் சிமிழும் கெண்டி, மேல் பகுதியில் தோரணம் இருந்தன. இவை எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பரமேஸ்வர வர்மன் ஆட்சி காலத்தை சேர்ந்தது என தெரிந்தது.