உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டிவனம் பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டிவனம்: திண்டிவனம் பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திண்டிவனம்-மரக்காணம் ரோடு கனகசபை  தெரு அருகில் பாப்பாத்தியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

விழாவையொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதற்கால பூஜைகள் நடந்தது.நேற்று முன்தினம் (ஜூலை., 20ல்)  காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால பூஜைகள், மாலை 6:00 மணிக்கு மூன்றாம்  கால பூஜைகள்நடந்தது.நேற்று (ஜூலை., 21ல்) காலை 6:00 மணிக்கு, பாப்பாத்தியம்மன், கற்பக விநாயகர், பாலமுருகன், தஷ்ணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை, நவக்கிரகம் மற்றும் பசுபதீஷ்வரர், காலபைரவருக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு மற்றும் பொது மக்கள்  செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில், பி.ஆர்.எஸ்., துணிக்கடை  உரிமையாளர் ரங்கமன்னார், ராம்டெக்ஸ் வெங்கடேசன், தொழிலதிபர்  கே.ஆர்.எஸ்.சுப்பராயலு, தி.மு.க., நகர செயலாளர் கபிலன், நியூ பாண்டியன்  உரிமையாளர் கே.பி.என்.சுரேஷ், ஓட்டல் சரஸ்வதி பங்கஜம் உரிமையாளர்  புருஷோத்தம்மன், ஸ்ரீ கிருஷ்ணா டயர்ஸ் உரிமையாளர் கிருஷ்ணராஜ், ஸ்ரீ பவானி  அம்மன் அக்ரோ சென்டர் உரிமையாளர் ஏழுமலை, திண்டிவனம் வேதாத்திரி  மனவளக்கலை அறக் கட்டளை நிர்வாகி ஆசைத்தம்பி, வழக்கறிஞர் வேலுமணி,  மில் அதிபர் வெங்கடேசன், வேத நாயகம், சிவா, எலக்ட்ரிஷியன் வெங்கடேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !