ஆத்தூர் கோயிலில் உழவாரப்பணி!
ADDED :5029 days ago
தூத்துக்குடி:ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத கோயிலில் உழவாரப்பணி நடந்தது.திருமந்திரநகர் உழவாரப்பணியின் 47வது உழவாரப்பணி ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோயிலில் தலைவர் முருகேசன் தலைமையில், கோயில் செயலாளர் காளிராஜன், பொருளாளர் ரத்தினம் மற்றும் சிவநேய செல்வர்களால் நடந்தது. கோயிலின் சுவர் மற்றும் தெப்பக்குளம் சுவர்களுக்கு வர்ணம் அடிக்கப்பட்டது. உழவாரப்பணி ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடேஷ் செய்திருந்தார்.