ஊட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: 1,008 சிலைகள் வைக்க முடிவு
ஊட்டி:ஊட்டியில் இந்து முன்னணி மாவட்ட பொதுகுழு மற்றும் விநாயகர் சதுர்த்தி, ஆலோ சனை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் பேசியதாவது:தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில், 1.50 லட்சம் இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. நீலகிரியில், 1,008 சிலைகள் வைக்கப்பட உள்ளன. அரசு கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்கு வரக்கூடாது என மாவட்ட கலெக்டர் கூறியது இந்துக்களுக்கு விரோதமானது.தமிழகத்தில் பல பகுதிகளிலும் தேச விரோத செயல்களில், ஈடுபட திட்டமிடும் பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ., கைது செய்து வருகிறது.
பயங்கரவாதிகளின் பின்னணிக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு, கிஷோர்குமார் தெரிவித்தார்.கூட்டத்திற்கு கோவை கோட்ட செயலாளர்கள் ராஜ்குமார், மஞ்சுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.