எருமனுார் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED :2268 days ago
மங்கலம்பேட்டை : எருமனுார் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. விருத்தா சலம் அடுத்த எருமனுார் மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்) நடந்தது.
இதையொட்டி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.மாலை 4:00 மணிக்கு நடந்த செடல் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.