உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

 காஞ்சிபுரம்: அத்தி வரதரை தரிசிக்க, காஞ்சிபுரம் வந்த பக்தர்கள், காமாட்சியம்மன் கோவிலுக்கும் வந்ததால், திங்கட்கிழமையான நேற்று, வழக்கத்தைவிட, பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 1ம் தேதி முதல் அத்தி வரதர் வைபவம் நடைபெறுகிறது.வைபவத்தை காண, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், கோவில்கள் அதிகம் நிறைந்த நகரமான, காஞ்சிபுரம் வருகின்றனர்.அத்தி வரதரை தரிசித்த பின், காஞ்சிபுரத்தில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.அந்த வகையில், நேற்று, அத்தி வரதரை பார்த்த பின், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு, அதிகளவிலான பக்தர்கள் வந்தனர்.பொதுவாக, காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அரசு விடுமுறை மற்றும் விசஷே நாட்களில் மட்டுமே பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். இருப்பினும், திங்கட்கிழமையான நேற்று, வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோவிலை சுற்றிலும் வெளியூர் கார், வேன், பார்க்கிங் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.வரதராஜ பெருமாள் கோவில் மட்டுமல்லாமல், பிற முக்கிய கோவில் அருகிலும் வாகன நெரிசலை சீரமைக்க, போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !