உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அம்மன் கோவிலில் ஆடி திருவிழா

காஞ்சிபுரம் அம்மன் கோவிலில் ஆடி திருவிழா

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லுார் கிராமதேவி  பொன்னியம்மன் கோவிலில், 15ம் ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்) காலை, 10:00 மணிக்கு,  செட்டிகுளம் பிள்ளையாருக்கு அபிஷேகமும், தொடர்ந்து, பால்குட ஊர்வலமும்  நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, அபிஷேக ஆராதனையும், 1:00 மணிக்கு  அம்மன் அழைத்தலும், 2:00 மணிக்கு, அன்ன தானமும் வழங்கப்பட்டது. ஏராளமான  பெண் பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். இரவு, சின்ன பரவத்துார் சீதா  நாடக மன்றத்தினரின், நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !