உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ’அம்மா’ குடிநீர்

சதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ’அம்மா’ குடிநீர்

வத்திராயிருப்பு:ஆடி அமாவாசைக்கு சதுரகிரி வரும் பக்தர்களுக்கு அம்மா குடிநீர்  வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக, தாணிப்பாறையில் ஆய்வு செய்த மதுரை  கலெக்டர் ராஜசேகர் தெரிவித்தார்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகள் குறித்து  விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை மலையடி வாரப்பகுதியில், மதுரை  கலெக்டர் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: கோயிலுக்கு வரும்  பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு  வரக்கூடாது.எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து வரக்கூடாது. பக்தர்களின்  நலன்கருதி 5 இடங்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  தாணிப்பாறை வழியை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்தவேண்டும். அமாவாசை  விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அம்மா குடிநீர் வழங்க பரிசீலிக்கப்பட்டு  வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !