உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா

மேலுார் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா

மேலுார் : மேலுார் உச்சிமாகாளியம்மன் கோயிலின் 3 நாள் திருவிழா நேற்று (ஜூலை 23)   துவங்கியது. முதல் நாளான நேற்று (ஜூலை., 23ல்) சேனல் ரோடு பிள்ளையார் கோயிலில்  இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு  அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. கரகம், திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று  (ஜூலை 24) பொங்கல் வைத்தல், முளைப்பாரி மற்றும் அக்னிசட்டி ஊர்வலம்  நடக்கிறது. நாளை தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !