உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் 6 மாதங்களுக்கு பின் மூலவர் தரிசனம்

அழகர்கோவிலில் 6 மாதங்களுக்கு பின் மூலவர் தரிசனம்

அலங்காநல்லுார் : அழகர்கோவிலில் 6 மாதங்களுக்கு பிறகு ஆடி  அமாவாசையை முன்னிட்டு மூலவரான சுந்தரராஜ பெருமாளை தரிசிக்க  பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கும், தேவியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு  ஒருமுறை சாம்பிராணி திருத்தைலம் சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த  பிப்., 2ல் மூலவருக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது. அன்று முதல் பக்தர்கள்  அனைவரும் உற்ஸவரை தரிசனம் செய்து வருகின்றனர். 6 மாதங்களாக  மூலவருக்கு செலுத்தவேண்டிய பூமாலைகளும், பரி வட்டங்களும் உற்ஸவருக்கே  செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஜூலை 31ம் தேதி ஆடி  அமாவாசையையொட்டி தைல பிரதிஷ்டை முடிந்து மூலவருக்கு கவசங்கள்  சாத்தப்படும்.

அன்று முதல் மூலவர் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு  பரிவட்டங்கள், நிறைமாலைகள் அணிவித்து, விசேஷ பூஜைகள் தொடங்கும்.  தொடர்ந்து மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்று மக்கள் நு ாபுர கங்கையில் புனித நீராட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை  தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்ளிட்டோர் செய்து  வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !