மழை வேண்டி ஆடி கூழ் காய்ச்சி வழிபாடு
ADDED :2272 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கடந்த 4 நான்கு ஆண்டுகளாக மழையின்றி நீர்நிலைகள் வறண்டு உள்ளது. தண்ணீர் பிரச்னை கடுமையாக உள்ளது. இதனால் வேலாயுத புரம், மலையரசன் தெருவை சேர்ந்த பெண்கள் மழை வேண்டி ஆயிரங்கண் மாரியம்மனை வழிபட்டு விரதம் இருந்து ஆடி செவ்வாயை முன்னிட்டு கேப்பை கூழ் காய்ச்சினர். அம்மனுக்கு படைத்து மக்களுக்கு வழங்கினர்.