உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு பால்குடம்

காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு பால்குடம்

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மனுக்கு 23வது ஆண்டாக  நேற்று (ஜூலை., 23ல்) நகரத்தார்கள் பால்குடம், அக்னிசட்டி, காவடி எடுத்து அம்மனை  வழிபட்டனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில்  பக்தர்கள் விரத மிருந்து அம்மனை தரிசனம் செய்தால் சகல நன்மைகளும்  கிடைக்கும் என்பது நம்பிக்கை. நகரத்தார்கள் அம்மனுக்கு பால்குடம் எடுக்க 16  நாட்கள் விரதம், அக்னிசட்டி எடுக்க ஒரு மாதம் விரதம் இருந்து ஒவ்வொரு  வருடமும் ஆடி முதல் செவ்வாயன்று பால்குடம், அக்னிசட்டி, காவடி  எடுக்கின்றனர்.

நேற்று (ஜூலை., 23ல்) காலை நகர சிவன்கோயிலின் அலங்கார மண்டபத்திலிருந்து 624  பால் குடம், 26 அக்னிசட்டி மற்றும் 2 காவடிகளுடன் சிவன் கோயிலை சுற்றி  வந்து அம்மன் சன்னதி வழியாக வீதிகளில் சென்று முத்துமாரியம்மன்  கோயிலை அடைந்தனர். பின்னர் அம்மனு க்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !