உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ரூ.73.59 லட்சம் காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.73.59 லட்சம் காணிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 73.59 லட்சம் ரூபாய்  உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

ராமேஸ்வரம் திருக்கோயிலில் 33 நாட்களுக்கு பிறகு நேற்று (ஜூலை., 23ல்) ராமநாதசுவாமி,  பர்வதவர்த்தினி அம்மன்சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள  உண்டியல் களை கோயில் ஊழியர்கள் திறந்து காணிக்கையை சேகரித்தனர். பின்  காணிக்கையை கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில்  திருக்கோயில் கல்யாண மண்டபத் தில் கோயில் உதவி கோட்ட பொறியாளர்  மயில்வாகனன், மேலாளர் முருகேசன், கண்காணி ப்பாளர்கள் பாலசுப்பிரமணி,  கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலை செல்வன், கண்ணன்  மற்றும் கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினர்.

இதில் ரொக்க பணம் 73 லட்சத்து 59 ஆயிரத்து 753 ரூபாயும், தங்கம் 61 கிராம்,  வெள்ளி 3 கிலோ 32 கிராம் காணிக்கையாக கிடைத்தது. பக்தர்கள் செலுத்திய  இக்காணிக்கையை அரசு வங்கி யில் டிபாசிட் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !