பரமக்குடி அருகே கலைச்செல்வியம்மன் ஆடிப்பொங்கல் விழா
பரமக்குடி : பரமக்குடி அருகே அரச நகரி கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா துவங்கியது.
முன்னதாக இக்கோயிலின் வருஷாபிசேக விழா நிறைவடைந்தது. தொடர்ந்து 26ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா காப்பு கட்டு, கொடியேற்றத்துடன்துவங்கியது. 108 விளக்கு பூஜையில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜூலை 26ல் பக்தர்கள் விரதம் இருந்து கரகம் எடுக்கும் விழாவும், கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் வீதிவலம் வரவுள்ளார். அன்று இரவு பூச்சொரிதல் விழா நடக்கிறது.
ஜூலை 27 ல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் அக்னிச்சட்டி, ஆயிரம் கண்பானை, பால்குடம் எடுத்து வருவர். தொடர்ந்து அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் நடக்கும். விழாவில் அரசநகரி, மென்னந்தி, நாகாச்சி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொள்வர்.ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கண்ணன், நிர்வாகி சுப்பம்மாள் குருந்தலிங்கம் செய்துள்ளனர்.