உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் அருகே நென்மேனி இஞ்ஞாசியார் ஆலய விழா துவங்கியது

சாத்துார் அருகே நென்மேனி இஞ்ஞாசியார் ஆலய விழா துவங்கியது

சாத்துார் : சாத்துார் அருகே நென்மேனி புனித இஞ்ஞாசியார் ஆலய பெருவிழா நேற்றுமுன்தினம் (ஜூலை., 22ல்) இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.

சாத்துார் பாதிரியார் போதகர்மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். ஆர்.ஆர்.நகர்  பாதிரியார் பெனடிக்ட் கொடிமரத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து  கொடியேற்றினார். இதன் பின் சிறப்பு திருப்பலி நடந்தது. கொடியேற்றத்தை  தொடர்ந்து நாள் தோறும் புனித இஞ்ஞாசியார் திரு உருவம் சப்பரம் பவனி  ,ஜூலை 30 , 31 ல் பெருவிழா தேர்பவனி நடைபெறுகிறது. ஏற்படுகளை  விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !