மானாமதுரையில் மழை வேண்டி கிராம தெய்வத்திற்கு பால்குடம்
ADDED :2273 days ago
மானாமதுரை: மானாமதுரை பட்டத்தரசியில் மழை பெய்ய வேண்டி மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் கிராம தெய்வங்களுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு பட்டத்தரசியில் ஆடிதோறும் நடைபெறும் வீர அழகர் கோயில் பிரம்மோற்ஸவ விழா மண்டகப்படிக்கு வரும் வீர அழகர்சாமி மற்றும் சக்கரத் தாழ்வார் இங்கு வந்து அருகே உள்ள அலங்காரகுளத்திற்கு சென்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம், அலங்காரகுளத்தில் தற்போது தண்ணீர் இல்லாததால் மக்கள் மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திருவிழா நடைபெறுவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மழையும் பெய்யாததால் பட்டத்தரசி மக்களும், மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களும் சேர்ந்து மழை வேண்டி கிராம தெய்வங்களுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.