உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் கோபுரத்தில் செடிகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் கோபுரத்தில் செடிகள்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள   செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில், 23 ஏக்கர் பரப்பளவில், ஐந்து   பிரகாரங்களுடன் அமைந்து ள்ளது. இக்கோவில் ராஜகோபுரம், 192 அடி   உயரத்துடன், ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.   

இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து   செல்கின்றனர்.இந்நிலையில், ராஜகோபுரத்தில் செடிகள் வளர துவங்கியுள்ளது.   இச்செடிகளின் வேர்கள், கோபுரத்தில் உள்ள சிற்பங்ளை சிதைக்கும் அபாயம்   உள்ளது. எனவே, சிறிய அளவில் செடிகள் இருக்கும்போதே, அதை வேருடன்   அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !