கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :2601 days ago
வெள்ளகோவில்: சோளீஸ்வரசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக விழா நடந்தது.
நேற்று மாலை காலபைரவருக்கு பால்,தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு, நெய், திருமஞ்சனம் உட்பட 32 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பெண்கள், மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அருட் பிரசாதம் பெற்றுச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காலபைரவர் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.