உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ் திருப்பதியில் அறைகள் காலி: முன்பதிவு செய்ய அழைப்பு

கீழ் திருப்பதியில் அறைகள் காலி: முன்பதிவு செய்ய அழைப்பு

ஈரோடு: திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தங்க, கீழ் திருப்பதியில், அறைகள் காலியாக உள்ளன. முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமலை வெங்கடாஜலபதியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்கள் தரிசனத்துக்கு டிக்கெட் கிடைத்தால், தங்கும் இடம் கிடைப்பதில்லை என்ற குறை உண்டு. வரும் ஆகஸ்டில் சுதந்திர தினம், இரண்டாவது சனிக்கிழமை, பக்ரீத் என, விடுமுறை தொடர்கிறது. அதேபோல் செப்.,18ல் புரட்டாசி துவங்குகிறது. அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி, 7, 8 தேதி களில் சரஸ்வதி, ஆயுத பூஜை தொடர்ந்து, தீபாவளி பண்டிகை விடுமுறை வருகிறது. இந்த மாதங்களில், இந்த நாட்களில், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள், திருப்பதி திருமலை வருவர். அவ்வாறு வருவோர் தங்குவதற்கு, கீழ் திருப்பதியில் அறைகள் காலியாக உள்ளன. ஈரோட்டில் உள்ள முன்பதிவு மையம் மூலம் பதிவுசெய்ய, ஈரோடு, ஸ்ரீவாரி டிரஸ்ட் பொறுப் பாளர் உமாபதி கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !