உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியமங்கலம் பண்ணாரி கோவில் உண்டியல் வசூல் ரூ.49.57 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி கோவில் உண்டியல் வசூல் ரூ.49.57 லட்சம்

சத்தியமங்கலம்: பண்ணாரியம்மன் கோவில் உண்டியலில், 49.57 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்தது. சத்தியமங்கலத்தை அடுத்த, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல்கள், மாதம் ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் ஹர்சினி, பண்ணாரியம்மன் கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில், 20 உண்டியல் கள் நேற்று (ஜூலை., 25ல்)திறக்கப்பட்டன. கோவில் ஊழியர்கள், சத்தி தனியார் கல்லூரியை மாணவர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 49 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 295 கிராம் தங்கம், 604 கிராம் வெள்ளி கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !