கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தேய்பிறை அஷ்டமி
ADDED :2322 days ago
கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 30 வகை அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற் றனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ஆலத்தூரான்பட்டி பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்திலும் தேய்பிறை அஷ்டமி அபிஷேக, ஆராதனை நடந்தது.