உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரையில் முளைப்பாரி உற்ஸவ காப்புக்கட்டும் விழா

கீழக்கரையில் முளைப்பாரி உற்ஸவ காப்புக்கட்டும் விழா

கீழக்கரை : கீழக்கரை மேலக்கொடிக்கால் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, தட்டாந் தோப்புத் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் 62ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ காப்பு கட்டும் விழா ஜூலை 23ல் துவங்கியது.ஜூலை 29ல் மாலை 6:00 மணிக்கு உலக நன்மைக்கான விளக்கு பூஜையும், மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை 8:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் கரகம் வந்தடையும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !