பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி ஆடிப்பூர விழா கொடியேற்றம்
பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்ஸவ விழா நேற்று (ஜூலை., 25ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
மூர்த்தி, தீர்த்தம், தலம் என்றசிறப்புகள் பெற்ற நயினார்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர் கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த செல்வது வழக்கம். இக்கோயிலின் ஆடிப்பூர திருக் கல்யாண திருவிழா ஜூலை 24 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞையுடன் துவங்கியது. நேற்று (ஜூலை., 25ல்) காலை 7:45 மணிக்கு சவுந்தர்யநாயகி அம்மன் சன்னதியில் உள்ளகொடி மரத்தில் நந்தி கொடியை வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
இரவு இந்திர விமானத்தில் அம்பாள் எழுந்தருளினார்.தினமும் காலை, மாலை என அம்மன வெள்ளி பல்லக்கு, அன்னம், சிம்மம், கமலம், கிளி, குதிரை வாகனங்களில் பல்வேறு அவதார ங்களில்வீதிவலம் வருகிறார். ஆக., 2 ல் காலை 8:30 முதல் 9:15 மணிக்குள் அம்மன் தேரோட் டம் நடக்கிறது. இரவு காமதேனு வாகனத்திலும், மறுநாள்காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
ஆக., 4 காலை 6:00 மணி முதல் அம்மன் தபசு மண்டபத்தில் எழுந்தருளியதும்சுவாமி -அம்மன் மாலை மாற்றலும், மாலை 6:00 மணிக்கு அம்மன்சயன கோலத்தில் புஷ்ப பல்லக்கில் வீதி வலம் வருவார். ஆக., 5 காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் நாகநாதசுவாமி - சவுந்தர்யநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. இரவு திருமணதிருக்கோலத்தில் மின் னொளி தீப ரதம், தென்னங்குருத்து சப்பரத்தில் சுவாமி, அம்பாள் தனித்தனியாக வீதிவலம் வருவர். ஆக., 6, 7 ல் ஊஞ்சல் உற்சவமும், ஆக., 8 ல் காப்பு களையப்பட்டு, ஆக., 11 ல் உற்சவ சாந்தியுடன்விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல்பாண்டியன், சரக பொறுப்பாளர் வைரவசுப்பிரமணியன் செய்து உள்ளனர்.