பல்லாங்குழி ஆடி வந்த அம்மன்
ADDED :2321 days ago
பரமக்குடி : நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை சவுந்தர்யநாயகி அம்மன் பல்லாங்குழி ஆடி வரும் திருக்கோலத்தில் வெள்ளி பல்லக்கில் வீதிவலம் வந்தார். முன்னதாக ஆடி 2 ம் வெள்ளியை முன்னிட்டு பரமக்குடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதயாத்திரை வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.