உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

பழநி கோயிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

பழநி: ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், காவடி எடுத்து வந்தனர். இதனால் நேற்று 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம் நடந்தது. வெளிமாவட்ட, மாநில பக்தர்கள் பால்குடம்,  காவடிகள் எடுத்தும் படிப்பாதையில் கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணிநேரம், பொதுதரிசன வழியில் 3 மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு தங்கமயில், தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !