உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருக்ஷராஜகணபதி கோவிலில் திருவிளக்கு பூஜை

விருக்ஷராஜகணபதி கோவிலில் திருவிளக்கு பூஜை

நாகை:  சீர்காழி அருகே வருஷபத்து கிராமத்தில் விருக்ஷராஜகணபதி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில்  ஆடி வெள்ளியை முன்னிட்டு சத்தியசாய் சமிதி  சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முதலில் சாய் காயத்ரி, விநாயகர் காயத்ரி மந்திரங்கள் சொல்லப்பட்டு திருவிளக்கு பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து திருவிளக்குக்கு பெண்கள் பூஜை செய்து விளக்குக்கு பூக்களால் அர்ச்சனை செய்தும், தீபாரதனைகள் செய்தும் வழிபட்டனர். இதில் வருஷபத்து கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !