மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :2320 days ago
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் அம்மன் கோவிலில், ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம், மாரியம்மனுக்கு பால், இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சிறப்பு அலங்காரம் செய்து சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. மகாதானபுரம், சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.