திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2273 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் விழாவையொட்டி, காலை உற்சவத்தில் வெள்ளி கவசத்தில் பராசக்தியம்மன் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகை முன்னிட்டு, பழனி ஆண்டவர் சன்னதியிலிருந்து 2008 காவடி எடுத்து வீதி உலா வந்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி வழிப்பட்டனர்.