மதுரையில் வைகைக்கு ஆரத்தி வழிபாடு
மதுரை, : மதுரையில் நடக்கும் வைகை பெருவிழாவில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தீர்த்த கிணற்றில் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் மதுரை புட்டுத்தோப்பில் வைகைப் பெருவிழாவையொட்டி ஆரத்தி வழிபாடு நடந்தது. நான்காம் நாளான நேற்று வைஷ்ணவ மாநாட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவா காலம், நாம சங்கீர்த்தனம் நடந்தது. வி.எச்.பி.,மத்திய செயலாளர் அரவிந்த்பாய் பிரம்ம பட் பேசுகையில்,மக்கள், இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் இம்மாநாடு நடக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் இயற்கை பேரிடர்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும், என்றார். ஸ்ரீவில்லிபுத்துார், கொங்குமண்டலம், மன்னார்குடி, பவானி ஜீயர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் தாமோதரன் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் ஆண்டாள், கிருஷ்ணன் வேடத்தில் பங்கேற்றனர். வைகை ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடந்தது. பின், பக்தி இன்னிசையுடன்,பிருந்தாவன தீபகேளிகா கோலாட்டம், நடந்தது. இன்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாட்டில், பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்ம ராஜா, திருவனந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் மேல்சாந்தி கோசாலா வாசுதேவன் பேசுகின்றனர்.