உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்

பாலமுருகன் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள பாலமுருகன் கோவிலில், கடந்த, 22ல், 4ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாலையில் சுவாமி நகர்வலம் சென்று, பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். நேற்று காலை, 10:45 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 10:30 மணிக்கு, இடுமன் பூஜை நடக்கிறது. வரும், 3ல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !