உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா

சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா

 சின்னமனுார் : குச்சனுார் சனீஸ்வரர் கோயில் இரண்டாவது ஆடி சனிவார திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஆடி சனிவார திருவிழா கடந்த 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.


இரண்டாவது சனிவாரத்தையொட்டி  ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனத்திற்கு ஒரு மணி நேரம் ஆனது. வெளியூர் பக்தர்கள் வசதிக்காக போடி, தேவாரம், தேனி, கம்பத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.குச்சனுார்  ராஜவாய்க்காலில் நீர் திறக்கப்படாததால் சுரபி நதி வறண்டுள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீராடி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !