சோலைமலை முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை விழா
ADDED :2270 days ago
அலங்காநல்லுார் : அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் ஆடி மாத கார்த்திகை விழா நடந்தது. சஷ்டி மண்டபத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. மூலவர் சுவாமிக்கும் , வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது. விரகனுார் திருப்புகழ் சபை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தனர்.