ஆரஞ்சு நிற பட்டாடையில் அத்திவரதர்
ADDED :2267 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 29ம் நாளான இன்று (ஜூலை 29) அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்திவரதர் தரிசனத்திற்காக இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 28 நாட்களில் 41 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.