உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லை காளியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

எல்லை காளியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

கடலுார்: கடலுார் அடுத்த பழைய வண்டிப்பாளையம் எல்லை காளி அம்மன் கோவிலில் செடல் மகோற்சவ விழா நடந்தது.இதை முன்னிட்டு, கடந்த 22 ம் தேதி இரவு 7 முதல் 8.30 மணி வரை மகா கணபதி கலச பூஜை, தீபாராதனை நடந்தது. 25ம் தேதி காலை 10 மணிக்கு வேம்பு, அரசு திருக்கல்யாண நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு எல்லை காளி அம்மனுக்கு காப்பு கட்டுதல், எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 26ம் தேதி காலை 9:30 மணிக்கு ஊற்றுக்காட்டு மாரியம்மன் கரகங்களுடன் வீதியுலா, மதியம் 1 மணிக்கு 1,008 குடம் நீர் மகா அபி ேஷகம், மாலை 4:30 மணிக்கு செடல் மகோற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !