உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஆடி அமாவாசை :ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்

திருப்பூர் ஆடி அமாவாசை :ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்

திருப்பூர்:ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து மதுரை வழியாக  ராமேஸ்வரத் துக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும்  நடந்து வருகிறது.நாளை ஆடி (ஜூலை., 31ல்) அமாவாசை. முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுப்பது, அன்னதானம் வழங்கு வது புண்ணியமாக கருதப்படுகிறது.

இந்நாளில்,  ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவில்  லட்சக் கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். அக்னி தீர்த்தக் கடலில்  முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப் பர்.திருப்பூரில் இருந்து பக்தர் ராமேஸ்வரம்  செல்ல வசதியாக, இன்று (ஜூலை., 30ல்) இரவு, 8:00 மணி முதல், 10:00 மணி வரை சிறப்பு பஸ் (பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப) இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு பழைய பஸ் ஸ்டாண்டில் துவங்கி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !