திட்டக்குடி அருகே மாரியம்மன் கோவில், பால்குட ஊர்வலம்
ADDED :2260 days ago
திட்டக்குடி:திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில், ஆடிமாத திருவிழாவையொட்டி, 108 பால்குட ஊர்வலம் நடந்தது.திருவிழா, கடந்த வாரம் காப்பு கட்டுத லுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஜூலை., 28ல்) காலை பால்குட ஊர்வலத்தையொட்டி, வெள்ளாற்றிலிருந்து சக்தி கலசம் எடுத்துவரப்பட்டது. 108 பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.