சுகப்பிரசவம் நிகழ மந்திரம்
ADDED :2260 days ago
எந்தப் பிரச்னையும் சிக்கலுமின்றி சுகப்பிரசவம் நிகழவேண்டும் என்பதே கர்ப்பிணிப் பெண்களின் விருப்பமாகவும் வேண்டுதலாகவும் அமையும். திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை மனதாரத் தியானித்து அனுதினமும் வழிபட்டுவந்தால், எவ்விதபிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழ அருள்பாலிப்பாள் அந்தத் அம்பிகை.
15 திதிகளில் 3-வது திதி திரிதியை. இதற்கான தெய்வம் பஹமாலினி. இந்த அம்மனை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதிகம்.
ஓம் பஹமாலின்யை வித்மஹே சர்வ வசங்கரியை தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத்
ஜாதக ரீதியான கோளாறுகள் இருப்பின், அந்தத் தடைகள் நீங்கி, சுகப்பிரசவம் நிகழ இந்த மந்திரம் கைகொடுக்கும்.