ராமநாதபுரத்தில் ஆடி அமாவாசை பாதுகாப்புக்கு 1,500 போலீசார்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இன்று 31ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் உட்பட முக்கிய கோயில்களில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர். ராமேஸ்வரம், திருப்புல்லாணி அருகே சேதுபந்தனஆஞ்சநேயர் கோயில், தேவிப் பட்டினம் நவபாஷாண கோயில்கள் உள்ளன. இந்த மூன்று கோயில்களுக்கும் தர்ப்பனம் செய்வதற்கும், முதாதையர்களுக்கு திதி கொடுப்பதற்கும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளி லிருந்து பக்தர்கள் வருவார்கள்.
இந்த மூன்று கோயில்களும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு வரும் பக்தர்களை முறைப்படுத்து வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சவுக்கு மர தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளது.
கடற்கரைப்பகுதியில் புனித நீராடுவதற்கு ராமேஸ்வரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் வரும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் தடுக் கவும், மாவட்டம் முழுவதும் இருந்து 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.