ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்
மனித வாழ்க்கையில் கருவுற்ற பெண்ணுக்கு அவரின் கணவர் பெற்றோர் , உறவினர் 5வது மாதத்தில் வளைகாப்பு நடத்துவது சமய சடங்காகும். இதேபோல் நம்மை படைத்த அம்பிகை க்கு வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாளாகும். பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து ஆடிப்பூரத்தில் அனைத்து அம்பாள் களுக்கும் வளைகாப்பு செய்வது மரபு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள்.
ஆடியில் அனைத்து அம்மன் கோயில்களிலும் விழாக்கள் களைகட்டும். ஆடி மாதம் பெரு மாள் கோயில்களில் சூடிக்கொடுத்த சுடர் கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டம், நடைபெறுவது வழக்கம். மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் இன்னும் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து சகலமும் அவனே என அவருடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங் கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண் டாள். மனிதர்கள் துாய பக்தியுடன் எந்தஒரு செயலை செய் தாலும் இறைவனின் கவனத்திற்கு செல்லும் என்பதற்கு அவரே சாட்சியா கும்