ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மங்களாசாசனம்
ADDED :2275 days ago
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளான நேற்று பெரியாழ்வார் மங்களாசாசனம் நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு ஆண்டாள் கோயிலிலிருந்து பெரியாழ்வார் ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருளி பெரியபெருமாளுக்கும், தொடர்ந்து கருட வாகனங்களில் எழுந்தருளிய காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன், பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கும் மங்களா சாசனம் செய்தார்.இதற்காக ஆண்டாள் பெரிய அன்னவாகனம், பெரியாழ்வார் சின்ன அன்னவாகனத்திலும் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளை வாசுதேவன் மற்றும் ரகு பட்டர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சடகோப ராமானுஜர் ஜீயர், தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.